Homeசெய்திகள்சென்னைமருத்துவர்களின் பாதுகாப்பு சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் - டாக்டர்கள் கோரிக்கை

மருத்துவர்களின் பாதுகாப்பு சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் – டாக்டர்கள் கோரிக்கை

-

சென்னையில் டாக்டர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து இன்று மாநிலம் முழுவதும் டாக்டர்கள் 45 ஆயிரம் பேர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

மருத்துவர்களின் பாதுகாப்பு சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் - டாக்டர்கள் கோரிக்கை

சென்னை கிண்டி கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு அரசு சிறப்பு மருத்துவமனையில், புற்றுநோய் துறை தலைவர் பாலாஜியை, ஒரு நோயாளியின் மகன் கத்தியால் சரமாரியாக குத்தினார். காயமடைந்த டாக்டர் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். சம்பவத்தை கண்டித்து, அரசு டாக்டர்களுக்கான அனைத்து சங்கங்களும் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்தன. மருத்துவமனை வளாகங்களில் டாக்டர்கள் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து, தமிழகத்தில் இந்திய டாக்டர்கள் சங்கத்தினர் இன்று  ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 7900 மருத்துவமனைகள், 45,000 டாக்டர்கள் போராட்டத்தில் பங்கேற்று உள்ளதாக இந்திய டாக்டர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அதனை ஒட்டி புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு இன்று நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தாம்பரம் அரசு மருத்துவமனை முன்பாக சென்னையில் அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்டதை கண்டித்தும், மருத்துவர்களின் பாதுகாப்பு சட்டத்தை முழுமையாக அமல்படுத்த கோரி அரசு மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

சென்னையில் அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் அரசு மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் குரோம்பேட்டையில் உள்ள தாம்பரம் அரசு மருத்துவமனை முன்பாக அரசு மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் சார்பில் மாபெரும்
கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மருத்துவர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர். மேலும் இந்த கண்டன ஆர்பாட்டத்தில்
அரசு மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், மருத்துவர்களின் பாதுகாப்பு சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தினார்கள்.

மேலும் இது போன்ற அசம்பாவிதங்களுக்கு மருத்துவர்களின் பற்றாக்குறையே காரணம் என்பதால் காலியாக உள்ள மருத்துவப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பொழுது கோரிக்கை விடுத்தனர்.

சென்னையில் டாக்டருக்கு கத்திக்குத்து; மனித சமூகமே கோமாவில் இருக்கிறது

 

MUST READ