Homeசெய்திகள்சென்னைபோக்குவரத்து துறைக்கு நிதி ஒதுக்க வேண்டும் – சௌந்தர்ராஜன் கோட்டை நோக்கி பேரணி!

போக்குவரத்து துறைக்கு நிதி ஒதுக்க வேண்டும் – சௌந்தர்ராஜன் கோட்டை நோக்கி பேரணி!

-

- Advertisement -

போக்குவரத்து துறையில் வரவுக்கும் செலவிற்குமான வித்தியாச தொகைக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச  கோரிக்கையை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் கோட்டை நோக்கி பேரணியில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து துறைக்கு நிதி ஒதுக்க வேண்டும் – சௌந்தர்ராஜன் கோட்டை நோக்கி பேரணி!சென்னை பல்லவன் இல்லத்தில்.  சி ஐ டி யு, ஏ ஐ டி யு சி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பாக பல்லவன் இல்லத்திலிருந்து கோட்டையை நோக்கி பேரணி  நடைபெற்றது. சிஐடியு மாநில தலைவர் செளந்தரராஜன் பேரணிக்கு தலைமை தாங்கினார். பேரணியில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

பேரணிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சிஐடியு மாநில தலைவர் சௌந்தர்ராஜன், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், போக்குவரத்து துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமனம் செய்வதை நிறுத்த வேண்டும். மினி பேருந்துகளை தனியார் மூலம் இயக்கும் நடவடிக்கையை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

போக்குவரத்து துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பண பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டையை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் தொழிலாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

எனினும் எங்களுடைய  கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் என்பது தொடர்ந்து நடைபெறும். எனவே அரசு உடனடியாக தங்களது  கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்  என்று வலியுறுத்தினார்.

MUST READ