Homeசெய்திகள்சென்னைபூந்தமல்லியில் வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து - சிறுவர்கள் உள்பட 7 பேர் காயம்

பூந்தமல்லியில் வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து – சிறுவர்கள் உள்பட 7 பேர் காயம்

-

- Advertisement -

சென்னை பூந்தமல்லி அருகே வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில ஏழு பேர் படுகாயம் அடைந்தனர்.

சென்னை பூந்தமல்லி அடுத்த சக்தி நகர் பகுதியில் வசித்து வருபவர் குமார். இவரது வீட்டின் கீழ் பகுதியில் சிறிய வீடுகளில் வடமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ளனர். இந்த நிலையில் இன்று வடமாநில தொழிலாளர்கள் தங்களது அறையில் சமையல் செய்து கொண்டிருந்தபோது திடீரென சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிவு ஏற்பட்டு தீப்பற்றி எரிய தொடங்கியது.

சத்தம் கேட்டு ஓடி வந்த வீட்டின் உரிமையாளர் குமார் மற்றும் அவரது உறவினர்கள்  தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.  அப்போது பயங்கர சத்தத்துடன் கேஸ் சிலிண்டர் வெடித்தது. இதில் குமார், சிறுவர்கள் உட்பட 7 பேருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து, கியாஸ் சிலண்டரை வெளியேற்றினர். இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ