புதிய உச்சம் தொட்ட இஞ்சி விலை- இன்றைய காய்கறி விலை நிலவரம்
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இஞ்சி விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு கிலோ இஞ்சி 200 ரூபாய் முதல் 290 ரூபாய் வரை விற்பனையாகிறது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்து விற்பனை விலையில் மாற்றம் செய்யப்பட்டுவருகிறது. கோயம்பேடு சந்தையில் இருந்து சென்னையில் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டுவருகிறது. அந்த வகையில் சென்னை கோயம்பேட்டில் வெங்காயம் மற்றும் இஞ்சியின் விலையானது அதிகரித்துள்ளது.
அந்தவகையில் பெரிய வெங்காயம் கிலோ 34 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீட்ருட் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், நெல்லைக்காய் ஒரு கிலோ 89 ரூபாய்க்கு விற்பனையாகிவருகிறது. நெல்லிக்காய் ஒரு கிலோ 89 ரூபாய்க்கும் விற்பனை வருகிறது. மேலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்துவரும் தக்காளி விலை, ஒரு கிலோ 15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. ஒரு கிலோ இஞ்சி 200 ரூபாய் முதல் 290 ரூபாய் வரை விற்பனையாகிறது.