Homeசெய்திகள்சென்னைசென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு!

-

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, சவரன் ரூ.58 ஆயிரத்து 280-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 வரை உயர்ந்து, ரூ.57,640-க்கு விற்பனையானது. இந்த நிலையில், தங்கம் விலை இன்று சவரனுக்கு மேலும் ரூ.640 உயர்ந்துள்ளது.

சூப்பர்! தங்கம் விலை குறைந்தது...சென்னையில் இன்று (செப்டம்பர் 2) தங்கம் விலை 

அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ரூ.58,280-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,285-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த 2 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,240 உயர்ந்துள்ளது.

சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை இன்று கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.103-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பார் வெள்ளி கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து, வெள்ளி கிலோ ஒரு லட்சத்து, 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

MUST READ