சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ரூ.55,560-க்கு விற்பனையாகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ.880 விலை குறைந்து, ரூ.55,480-க்கு விற்பனையானது. இந்த நிலையில், இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, சவரன் ரூ.55,560-க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.10 அதிகரித்து, ரூ.6,945 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை மாற்றம் இன்றி கிராம் ரூ.99-க்கு விற்பனையாகிறது. இதேபோல், பார் வெள்ளி கிலோவுக்கு மாற்றம் ஏதுமின்றி 99 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.