சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து, ரூ. 56,960க்கு விற்பனையாகிறது.
சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றம் இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ. 56,200க்கு விற்பனையானது. இந்த நிலையில், நேற்று தங்கம் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.56,760-க்கு விற்பனையானது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.200 அதிகரித்துள்ள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து, ரூ. 56,960க்கு விற்பனையாகிறது. இதேபோல், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 25 ரூபாய் உயர்ந்து ரூ.7,120க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிராமிற்கு 1 ரூபாய் அதிகரித்து, 103 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பார் வெள்ளி கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் அதிரித்து, ஒரு லட்சத்து 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.