சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.680 குறைந்து, ஒரு சவரன் ரூ.61,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்தது. கடந்த ஜனவரி 31ஆம் தேதி அன்று வரலாற்றில் புதிய உச்சமாக தங்கம் விலை சவரன் ரூ.61 ஆயிரத்தை கடந்தது. அதற்கு அடுத்த நாளே ரூ.62 ஆயிரத்தை எட்டி சவரன் ரூ.62,320க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் நடுத்தர மற்றும் சாமானிய மக்கள் தங்கம் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. நேற்று தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் சவரன் ரூ.62,320க்கு விற்பனையானது. இந்த நிலையில் இன்று ஆபரணத்தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.680 குறைந்துள்ளது.
சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்து, ஒரு சவரன் ரூ.61,640-க்கு விற்பனையாகிறது. ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.85 குறைந்து ஒரு கிராம் ரூ.7,705-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெளியின் விலையில் தொடர்ந்து 4வது நாளாக மாற்றம் இன்றி ஒரு கிராம் ரூ.107க்கு விற்பனையாகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்துக்கு வர்த்தகமாகிறது