சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து, ரூ.64,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறு முகத்தில் இருந்து வருகிறது. சவரன் 64 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனையாவதால் நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு தங்கம் வாங்குவது எட்டாக்கனியாகி வருகிறது. இந்நிலையில் சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத்தங்த்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து, ரூ.64,520க்கு விற்பனையானது. இந்நிலையில், இன்று ஆபரணத்தங்கத்தின் மேலும் உயர்ந்து சவரன் ரூ.65 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.64,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ. 55 அதிகரித்து, ஒரு கிராம் ரூ. 8120க்கு வர்த்தகமாகிறது. சென்னையில் சில்லறை வரத்தகத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.110-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,10,000-க்கும் விற்பனையாகிறது.