சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து, சவரன் ரூ.53,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.53,760-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், வெள்ளி விலையும் கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ரூ.92-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தியை ஒட்டி இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.53 ஆயிரத்து 440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.6 ஆயிரத்து 680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் 50 காசுகள் குறைந்து, 89 ரூபாய் 50-காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பார் வெள்ளி கிலோவுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் குறைந்து ரூ.89 ஆயிரத்துக்கு வர்த்தகமாகிறது.