Homeசெய்திகள்சென்னைசென்னையில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை... இன்று சவரன் எவ்வளவு தெரியுமா?

சென்னையில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை… இன்று சவரன் எவ்வளவு தெரியுமா?

-

- Advertisement -

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து 56,840 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் கடந்த வாரம் தொடர்ந்து உயர்ந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களாக குறைந்து வந்தது. கடந்த 24ஆம் தேதி சவரன் ரூ.58,400-க்கு விற்பனையான நிலையில், கடந்த 2 நாட்களில் சவரனுக்கு 1,760 ரூபாய் வரை குறைந்து ரூ.56,640க்கு விற்பனையானது. இந்த நிலையில், தங்கம் விலை இன்று சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்துள்ளது.

அட்சய திருதியை - தங்கம் விலை 2-வது முறை உயர்வு

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து 56,840 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ரூ.7,105க்கு விற்பனையானது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி கிராம் ரூ.98-க்கு விற்பனையாகிறது. பார் வெள்ளி கிலோ ரூ.98 ஆயிரத்துக்கு வர்த்தகமாகிறது.

MUST READ