சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து, 57 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சென்னையில் கடந்த வாரம் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.58,280-க்கு விற்பனை செய்யப்பட்டது. பின்னர் படிப்படியாக தங்கத்தின்விலை குறைந்து நேற்று சவரன் ரூ.57,200க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்றும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 சரிந்துள்ளது.
அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து, 57 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு 15 ரூபாய் சரிந்து, ரூ.7,135க்கு வர்த்தகமாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி கிராம் ரூ.100-க்கும், பார் வெள்ளி கிலோ ரூ.1,00,000க்கும் விற்பனையாகிறது.