சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 6வது நாளாக உயர்ந்துள்ளது. இன்று சவரனுக்கு ரூ.600 உயர்ந்து, ரூ.58,400க்கு விற்பனையாகிறது.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த வாரம் தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது. இதற்கு மாறாக நடப்பு வாரத்தில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று தங்கம் விலை 5வது நாளாக ரூ.640 உயர்ந்து, சவரன் ரூ.57,800-க்கு விற்பனையானது. இந்த நிலையில், தங்கம் விலை இன்று சவரனுக்கு மேலும் ரூ.600 உயர்ந்துள்ளது. கடந்த 6 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,920 உயர்ந்துள்ளது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் தங்கம் வாங்குவது இயலாத காரியமாக மாறியுள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து, ரூ.58,400க்கு விற்பனையாகிறது. ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.75 அதிகரித்து, ரூ. 7,300-க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் ரூ. 101க்கு விற்பனையாகிறது. பார் வெள்ளி கிலோவுக்கு ஒரு லட்சத்து ஆயிரம் ருபாய்க்கு வர்த்தகமாகிறது.