சென்னையில் 4 தலைமுறையை கண்ட பாட்டி தனது பேரப்பிள்ளைகளுடன் 100வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடி உள்ளார்.
சென்னை குன்றத்தூர் அடுத்த அனகாபத்தூரை சேர்ந்தவர் லலிதா குழந்தைவேல் 1924 ஆம் ஆண்டு சென்னை மயிலாப்பூரில் பிறந்த இவர்.2 ஆம் உலக போர் முதல் ஆங்கிலேயர் ஆட்சி, இந்திய சுகந்திரத்தை கண்டவர். இவருக்கு குழந்தை வேலு என்பவருடன் திருமணமாகி கோதை நாயகி/74 , ரேணுகா தேவி/67, விஜயலட்சுமி/63 ஆகிய மகள்கள் உள்ளனர். அதேபோல் பேர பிள்ளைகள் அவர்கள் பெற்ற பிள்ளைகள், அவர்கள் பெற்ற பிள்ளைகள் என 4 தலைமுறையாக இதுவரை கொல்லு பேர , எள்ளு பேர பிள்ளைக்கள் என 70 க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.
இவருக்கு 100 வயது நிரம்பியதை அடுத்து அவரது உறவினர்கள் 100 வது பிறந்த நாளை வெகுவிமரிசையாக கொண்டாடியுள்ளனர். குன்றத்தூரில் உள்ள தனியார் மண்டபத்தில் லலிதா பாட்டியின் நூறாவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டுள்ளது. மகள்கள், பேரப்பிள்ளைகள், கொள்ளுப்பேரன், எள்ளு பேரன் என ஏராளமானோர் கலந்து கொள்ள நூறு வயது பாட்டி கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார்.
இதில் கலந்து கொண்ட அவரது உறவினர்கள் அவரிடம் ஆசி பெற்றுள்ளனர். அதேபோல் பேரக்குழந்தைகள் பாட்டியின் நூறாவது பிறந்த நாளில் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
நூறு வயதிலும் சுய நினைவுடனும் உடல் தகுதியுடன் உள்ள பாட்டி செய்தியாளர்களிடம் பேசியபோது,” தான் இன்னும் 10 வருடங்கள் கூட உயிரோடு இருப்பேன் என்றும் தற்போதுள்ள தலைமுறையினர் அவரவர் வேலையை அவர்களே செய்து சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்றும் அதுவே தான் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு முக்கிய காரணம் என கூறியுள்ளார். இன்றளவிலும் தன்னால் முடிந்த வேலைகளை தானே செய்வதாகவும் உடற்பயிற்சி செய்வதாக தெரிவித்தார்.
மதுரை நகராட்சி மருத்துவமனையில் செவிலியர் உதவியாளராக இருந்த போது சுமார் 5500 பிரசவம் பாரத்தாக தெரிவித்துள்ளார். தன்னை பார்க்க நான் பிரசவம் பார்த்த பிள்ளைகளும் வந்துள்ளனர் என தற்போது நீங்கள் கூறியுள்ளது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ட்ரீட்…. ‘தி ராஜா சாப்’ பட மோஷன் போஸ்டர் இணையத்தில் வைரல்!