Homeசெய்திகள்சென்னைநரிக்குறவர்களை அனுமதிக்காதது குறித்து ஜிவி பிரகாஷ் கருத்து

நரிக்குறவர்களை அனுமதிக்காதது குறித்து ஜிவி பிரகாஷ் கருத்து

-

- Advertisement -

“கலைகள் அனைவருக்கும் சொந்தமானது” நரிக்குறவர்கள் படம் பார்க்க அனுமதிக்கப்படாத விவகாரம் தொடர்பாக நடிகர் ஜிவி பிரகாஷ் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

நரிக்குறவர்களை அனுமதிக்காதது குறித்து ஜிவி பிரகாஷ் கருத்து

நடிகர் சிலம்பரசனின் ‘பத்து தல’ திரைப்படம் இன்று(30.03.2023) உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கிருஷ்ணா இப்படத்தை இயக்க கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தை பார்ப்பதற்காக சென்னை ரோகினி திரையரங்கில் நரிக்குறவர்கள் டிக்கெட் பெற்று உள்ளே செல்லும் பொழுது அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தீண்டாமை செயல் வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நரிக்குறவர்களை அனுமதிக்காதது குறித்து ஜிவி பிரகாஷ் கருத்து

இந்நிலையில் நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் குமார் இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் சகோதரிகள் தாமதமாக திரையரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டதாக தகவல் தெரிகிறது, இருப்பினும் முதலில் அனுமதி மறுத்ததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது, கலைகள் அனைவருக்கும் சொந்தமானது என தனது ட்விட்டரில் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

MUST READ