தொலைதூரக் கல்வி தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்திருக்கிறது.
இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.ஏழுமலை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , “சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனத்தின் இளங்கலை, முதுகலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான தேர்வுகள் (ஜுன் 2024 ) அக்டோபர் 5ம் தேதி முதல் தொடங்குகின்றன. இத்தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் தொலைதூரக் கல்வி நிறுவன இணையதளத்தில் (www.ideunom.ac.in) இன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு… இன்று 7 மாவட்டங்களில் பலத்த மழை கொட்டும்!
தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். மேலும், தேர்வுக்கால அட்டவணையும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.” என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.