Homeசெய்திகள்சென்னைசென்னையில் கனமழை: விமான சேவைகள் ரத்து; வானில் வட்டமடிக்கும் விமானம்!

சென்னையில் கனமழை: விமான சேவைகள் ரத்து; வானில் வட்டமடிக்கும் விமானம்!

-

சென்னையில் கனமழை: விமான சேவைகள் ரத்து; வானில் வட்டமடிக்கும் விமானம்!பெஞ்சல் புயல் காரணமாக, சென்னையில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. சென்னையில் மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் விமானங்கள் வானில் வட்டமடிக்கின்றன.

பெஞ்சல் புயல் தற்போது வங்கக்கடலில் சென்னைக்கு தென்கிழக்கே 190 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு 180 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. சென்னை மற்றும் புதுச்சேரி இடையே மரக்காணம்/மகாபலிபுரத்தை மையமாக வைத்து கரையை கடக்க துவங்கும் என கணிக்கப்பட்டுள்ளது

மஸ்க்ட், குவைத், மும்பை உள்பட 5 விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டமடிக்கின்றன. மழை, காற்றின் வேகம் குறைந்த பின் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சென்னையில் இருந்து சிங்கப்பூர், மங்களூர், திருச்சி செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

சென்னை மற்றும் புதுவை மக்களுக்கு எச்சரிக்கை; வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்

MUST READ