அக்கரை செக்போஸ்ட் அருகே விபத்தை ஏற்படுத்திய போது சிக்கினார். பயணிகளை அவமதிக்கும் பேருந்து ஓட்டுனர் நடத்துனர்களை பழிவாங்க இந்த செயலில் ஈடுபட்டதாக போலீசாரிடம் தகவல்சென்னை நீலாங்கரை அடுத்த அக்கரை செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை 2 மணிக்கு முன்னால் சென்று கொண்டிருந்த சிமெண்ட் கான்கிரீட் கலவை லாரி மீது மாநகர பேருந்து( தடம் எண் 109 )மோதியது. இதில் மாநகரப் பேருந்து நம்பர் பிளேட் மட்டும் சேதமடைந்தது. சிமெண்ட் கலவை லாரிக்கு எந்தவித சேதமும் இல்லை. லாரி டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு, அந்த பகுதியில் நின்ற ரோந்து போலீசாரிடம் தகவல் தெரிவித்தார்.
மாநகர பேருந்து ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்தவரிடம் போலீசார் விசாரித்தபோது குடிபோதையில் திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் இருந்து இந்த பேருந்தை ஓட்டி வந்தேன் என போலீசாரிடம் சொல்லி அவர்களை அதிர்ச்சி அடைய வைத்தார். இதையடுத்து திருவான்மியூர் போலீசாருக்கு நீலாங்கரை ரோந்து போலீசார் தகவல் தெரிவித்தனர்.
திருவான்மியூர் போலீசார் போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு குடிபோதையில் பேருந்தில் அமர்ந்திருந்த பெசன்ட் நகரை சேர்ந்த ஆபிரகாம்(33) என்பவரை காவல் நிலையம் அழைத்து வந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கூடுவாஞ்சேரியில் கார் இன்டீரியர் டெகரேஷன் வேலை செய்து வருவதாகவும்.
நேற்று காலை கூடுவாஞ்சேரிக்கு பேருந்தில் சென்ற போது, சில்லறை கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் நடத்துனர், ஆபிரகாமை ஒருமையில் பேசினாராம். பின்னர் இருக்கையில் அமர்ந்த போது, அங்கே உட்கார்.. இங்கே உட்கார் என தொந்தரவு செய்தாராம். கூடுவாஞ்சேரி செல்லும் வரை பேருந்து நடத்துநர் தொடர்ந்து திட்டி கொண்டே வந்தாராம். இதனால் மன வேதனை அடைந்த ஆபிரகாம். பயணிகளை அவமதிக்கும் போக்குவரத்து கழக ஓட்டுநர் ,நடத்துனர்களுக்கு பாடம் புகட்ட முடிவு செய்துள்ளார். நேற்று இரவு பணி முடிந்து 9 மணிக்கு திருவான்மியூர் வந்துள்ளார்.
திருவான்மியூரில் மது வாங்கி குடித்துவிட்டு பேருந்து நிலைய வாசலிலேயே படுத்திருந்துள்ளார். அதிகாலை 2 மணிக்கு பேருந்தை எடுத்துச் சென்றபோது காவலாளி கண் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார் என ஆபிரகாம் தெரிவித்துள்ளார். போதை தெளிந்தவுடன் அவரிடம் மீண்டும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்..
வீடு திரும்பும் போது ஏற்பட்ட கோர விபத்து…!சம்பவ இடத்தில் பிரிந்த காதல் ஜோடிகள்!