Homeசெய்திகள்சென்னைதற்கொலைகளை தடுக்க முடியவில்லை - சென்னை ஐஐடி..

தற்கொலைகளை தடுக்க முடியவில்லை – சென்னை ஐஐடி..

-

சென்னை ஐஐடி-யில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், பிரச்சனைகளை மாணவர்கள் வெளிப்படுத்தாததால் தற்கொலைகளை தடுக்க முடியவில்லை என ஐஐடி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

சென்னை கோட்டூர்புரத்தில் செயல்பட்டு வரும் ஐஐடி வளாகத்தில் உள்ள ஆண்கள் விடுதியில் இன்று மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பி.டெக் 3-ம் ஆண்டு படித்துவரும் மாணவர் புஷ்பக், நீண்டநேரமாக அறைக்கதவை திறக்காததால், சந்தேகமடைந்த மற்ற மாணவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது மாணவன் புஷ்பக் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. பின்னர் தகவலின்பேரில் வந்த கோட்டூர்புரம் போலீசார் மாணவரின் உடலைக் கைப்பற்றி ராயபேட்டை மருத்துவமனைக்கு உடலை பிரேத பரிசோதனைகாக கொண்டு சென்றனர்.

Suicide - தற்கொலை

ஏற்கனவே கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 2 மாணவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். தொடர்ந்து தற்போது புஷ்பக் என்ற மாணவனும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துயுள்ளது. படிப்பின் காரணமாக ஏற்படும் மனஅழுத்தத்தால் மாணவர்கள் தற்கொலை முடிவை எடுக்கிறார்களா?? அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஐஐடி வளாகத்தில் இருக்க கூடிய ஆசிரியர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஐஐடி சென்னை - IIT Madras

இந்நிலையில், பிரச்சனைகளை மாணவர்கள் வெளிப்படுத்ததால் தற்கொலைகளை தடுக்க முடியவில்லை என ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா காலகட்டத்திற்கு பிறகு ஐஐடி மாணவர்கள் பல்வேறு சமூக அழுத்தத்திற்கு உள்ளாகி இருப்பதாகவும், பொருளாதாரம், குடும்பப்பிரச்சனை, மன அழுத்தம் காரணமாகவே மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதாகவும் விளக்கமளித்துள்ளது. மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் தொடர்ந்து கவுன்சிலிங் அளிக்கப்பட்டு வருவதாகவும், மாணவன் புஷ்பக் தற்கொலை தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி அறிக்கை வெளியிடப்படும் என ஐஐடி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

MUST READ