சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து, ரூ.56,000க்கு விற்பனையாகிறது.
சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. நேற்று தங்கம் சவரனுக்கு ரூ.160 அதிகரித்து, சவரன் ரூ.55,840க்கு விற்பனையானது. இந்த நிலையில் இன்று தங்கம் சவரனுக்கு மேலும் ரூ.160 அதிகரித்து, புதிய உச்சமாக ரூ.56,000க்கு விற்பனையாகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.56,000க்கு விற்பனையாகிறது. ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.7,000க்கு வர்த்தகமாகிறது. அதேவேளையில் வெள்ளி விலை தொடர்ந்து 2வது நாளாக மாற்றம் இன்றி ஒரு கிராம் ரூ.98க்கு விற்பனையாகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.98 ஆயிரத்துக்கு வர்த்தகமாகிறது.