Homeசெய்திகள்சென்னைசென்னையில் மின்சாரம் தாக்கி துப்புரவு பணியாளர் பலி!

சென்னையில் மின்சாரம் தாக்கி துப்புரவு பணியாளர் பலி!

-

- Advertisement -

கழிவுநீர் கால்வாயை தூர் வாரும்போது போது நேர்ந்த துயரம். மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி. எம்ஜிஆர் நகர் போலீசார் விசாரணை!

சென்னை எம்ஜிஆர் நகர் அங்காளம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பட்டாபிராமன் வயது 52 . தற்காலிக துப்புரவு பணியாளரான இவர் இந்த பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாயை தூர்வாரும் பணி செய்து கொண்டிருந்தார்.

சென்னையில் மின்சாரம் தாக்கி துப்புரவு பணியாளர் பலி!அப்போது, கையில் வைத்திருந்த இரும்புக் கம்பி எதிர்பாராத விதமாக தெரு பகுதியில் தாழ்வாக சென்ற மின்சார கம்பியின் மீது பட்டு மின்சாரம் தாக்கி கீழே சுருண்டு விழுந்தார். அருகில் உள்ளவர்கள் ஆட்டோ மூலமாக கே.கே. நகர் அரசு மருத்துவமனை அழைத்துச் சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த எம்ஜிஆர் நகர் போலீசார் சடலத்தை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ