Homeசெய்திகள்சென்னைசென்னையில் கடந்த 7 நாட்களில் 23 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது!

சென்னையில் கடந்த 7 நாட்களில் 23 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது!

-

- Advertisement -

சென்னை மாநகரில் கடந்த 7 நாட்களில் 23 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

சென்னை மாநகரில் குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த காவல் ஆணையர்  அருண் உத்தரவின்பேரில், தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

cop chennai

நடப்பாண்டில் ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 25 வரை சென்னை நகரில் கொலை, கொலை முயற்சி மற்றும் பொதுஅமைதிக்கு பங்கம் விளைவிக்கும் சட்டம் ஒழுங்கு குற்றங்களில் ஈடுபட்ட 482 குற்றவாளிகளும், திருட்டு, வழிப்பறி, பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 134 குற்றவாளிகளும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதேபோல், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 199 குற்றவாளிகளும், சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 7 குற்றவாளிகள், பெண்களை மானபங்கம் படுத்திய 6 குற்றவாளிகள் உள்பட மொத்தம் 885 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை காவல் ஆணையாளர் அருண் உத்தரவின்பேரில் கடந்த ஆகஸ்ட் 19 முதல் 25 வரையிலான 7 நாட்களில் மட்டும் 23 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். குற்றவாளிகளின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் பரிந்துரையின் பேரில், காவல் ஆணையாளர் அருண், 6 நபர்களை கடந்த 21ம் தேதியும்,  10 நபர்களை கடந்த 22ஆம் தேதியும்,  7 நபர்களை கடந்த 23ம் தேதியும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்பேரில், மேற்படி 23 குற்றவாளிகளும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

MUST READ