Homeசெய்திகள்சென்னைசென்னை சேப்பாக்கத்தில் புதிய குடியிருப்பு கட்டிடம் திறப்பு - உதயநிதி ஸ்டாலின்

சென்னை சேப்பாக்கத்தில் புதிய குடியிருப்பு கட்டிடம் திறப்பு – உதயநிதி ஸ்டாலின்

-

- Advertisement -

சென்னை சேப்பாக்கம் அய்யாபிள்ளை தெருவில் ரூ. 94 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புக்  கட்டடத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்…

சென்னை சேப்பாக்கத்தில் புதிய குடியிருப்பு கட்டிடம் திறப்பு - உதயநிதி ஸ்டாலின்

புதிய கட்டடத்தில் தலா 688 சதுர அடியிலான 6 வீடுகள் உள்ளன ,  கீழ்த்தளம் வாகன நிறுத்துமிடமாகவும் , அதற்கு மேலே 3 தளங்களும் கட்டப்பட்டுள்ளன. 6 வீடுகளும் அறநிலையத்துறை சார்பில்  திருக்கோவில் பணியாளர்களுக்கும் , வாடகை வீடுகளாகவும் பயன்படுத்தப்பட உள்ளன. பயன்பாடற்ற கோவில் நிலங்களில் கட்டடங்கள் கட்டி வருவாய் ஈட்ட அறநிலையத்துறை  சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

அறநிலையத்துறை நிலங்களில் கட்டடங்கள் கட்டுவதன் மூலம் ஆக்கிரமிப்பை தடுப்பதுடன் , வருவாயையும் ஈட்ட முடியும் என அறநிலையத்துறையினர் தெரிவித்துள்ளனா். பார்த்தசாரதி கோவிலுக்கான புதிய குடியிருப்பு கட்டடத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தாா். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றாா்.

3வது தமிழ்நாடு காலநிலை மாற்ற உச்சி மாநாடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடக்கம்

MUST READ