சென்னை மாநகராட்சிக்கு பகுதிகளில் நீர் வளத்துறை கட்டுப்பாட்டில் இருந்த வேளச்சேரி வீராங்கள் ஓடை,விருகம்பாக்கம் கால்வாய் சமீபத்தில் சென்னை மாநகராட்சி இடம் ஒப்படைக்க பட்டது. அதற்குப் பிறகு இந்த கால்வாய்களை ஆழப்படுத்தி அகலப்படுத்தும் பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. சென்னை வெள்ள பாதிப்புகளுக்கு நிரந்தர தீர்வு காண ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது அதன் அடிப்படையில் விருகம்பாக்கம் கால்வாய் 6.5 கிலோ மீட்டர் பயணித்து கூவம் ஆறு வழியாக கடலில் கலக்கிறது
இந்த கால்வாய் பயணிக்கும் மொத்த தொலைவில் மொத்தம் 28 பெரிய பாலங்கள் (culvert) உள்ளது. விருகம்பாக்கம் கால்வாய் துவங்க கூடிய இடத்தில் இருக்கும் பாலத்தின் அகலம் 18 மீட்டரில் இருந்து குடியிருப்பு பகுதிகள் அடர்த்தியாக இருக்கும் இடங்களில் 12,5,6 என சுருங்கி உள்ளது. இதன் காரணமாக 1700 கன அடி மழைநீர் செல்ல வேண்டிய இடங்களில் 800 கன அடி மட்டுமே செல்கிறது. இதன் காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு குடியிருப்பு பகுதிகளில் ஏற்படுகிறது.
குறிப்பாக எம் எம் பி ஏ மெட்ரோ வடபழனி 100 அடி சாலையில் ஒவ்வொரு மழையின் போதும் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. அப்பகுதி உட்பட நெற்குன்றம் ,சாய் நகர், இந்திரா காந்தி தெரு,காமராஜ் நகர்,ஆகிய 12 இடங்களில் வெள்ளப்பெருக்கு காரணமாக உள்ள சிறிய குருகிய பாலங்களை இடித்து உயர்த்தி கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கால்வாய்களை தூர்வாரும் பணிகளை மேலும் மேம்படுத்த ஐ ஐ டி உதவியுடன் அறிவியல் பூர்வமான (பேத்தொமெட்ரி) ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் தேவைப்படும் இடங்களில் கூவம் ஆற்றில் கலக்க கூடிய பகுதிகளில் புதிய கால்வாயை அமைத்து கூவம் ஆற்றில் இணைக்க சாத்திய கூறுகள் ஆய்வு செய்யப்படுகிறது. இப்பணிகளுக்காக இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றி சட்டபூர்வமான நடவடிக்கைகளை ஜனவரி பிப்ரவரி மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
மேலும் கால்வாயை தூர்வாரும் பணியில் 1500 டன் கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது மேலும் இந்த பணிகளின் காரணமாக 25 லட்சம் மக்கள் வெள்ளத்தில் சிக்காமல் பாதுகாக்கப்படுவார்கள்.
மூன்றடி தூரம்… துப்பாக்கிச் சூட்டில் எப்படித் தப்பினார் அரசியல் தலைவர்..?