- Advertisement -
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறைகளில் உள்ள கைதிகள், அச்சத்தின் காரணமாக தங்கள் குறைகளை வெளியே சொல்வதில்லை என சென்னை உயர்நீதி மன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை புழல் சிறையில் மூடப்பட்டுள்ள கேன்டீனை மீண்டும் திறக்க வேண்டும் என விசாரணை உள்ள கைதி பக்ரூதின் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சிறையில் உணவு வழங்கும் கேன்டீன் தொடர்பாக ஒரு கைதி மட்டுமே புகார் அளித்துள்ளார்.
சிறைதுறையின் விதிகளின்படி சிறை நிர்வாகமானது சரியாக தான் செயல்படுகிறது என அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.