லைகா நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும், தன்னிடம் வெற்று பேப்பரில் கையெழுத்து பெறப்பட்டதாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
திரைப்பட உரிமை தொடர்பாக விஷால் பட நிறுவனத்திற்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கின் குறுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இந்த வழக்கில் நடிகர் விஷால் நீதிபதி முன் நேரில் ஆஜராகி சாட்சியம்
அளித்தார். அப்போது, லைகா நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும், தன்னிடம் வெற்று பேப்பரில் கையெழுத்து பெறப்பட்டதாகவும் கூறினார். அப்போது, நீங்கள் போட்ட கையெழுத்தை எப்படி மறுக்க முடியும். மிகவும் புத்திசாலித்தனமாக பதில் சொல்வதாக நினைக்கிறீர்களா ? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து,லைகாவை தவிர வேறு யாரிடமாவது கடன் வாங்கியிருக்கிறார்களா? என்ற கேள்விக்கு, ஆம் லைகா நிறுவனத்தால் தான் அந்த கடன் வாங்க நே ர்ந்ததாக விஷால் தெரிவித்தார். குறுக்கு விசாரணை முடிவடையாததால் விசாரணை நாளைக்கு ஒத்திவைத்து, நீதிபதி உத்தரவிட்டார்.