கோயம்பேடு சந்தையில் அதிரடியாக குறைந்த தக்காளி விலை
கோயம்பேடு மொத்த சந்தையில் தக்காளி வரத்து அதிகரித்ததால் விலை கணிசமாகக் குறைந்தது.
தொடர் மழைக் காரணமாக தக்காளி விளைச்சல் பாதித்தது காரணமாக கோயம்பேடு மொத்த சந்தையில் தக்காளியின் வரத்து குறைந்தது. இதன் காரணமாக, தக்காளி விலை உச்சத்தை தொட்டு 200ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், பிற மாநிலங்களில் இருந்தும் தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் இருந்தும் கோயம்பேடு மொத்த சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக, நீண்ட நாட்களுக்கு பின்னர் தக்காளி விலை கணிசமாக குறைந்துள்ளது. குறிப்பாக, கடந்த இரண்டாம் ரக இரண்டு நாட்களில் கிலோ ஒன்றுக்கு 50 ரூ குறைந்து, 40ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கர்நாடகாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தக்காளி கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வரக்கூடிய நாட்களில் தக்காளியின் வரத்து தொடர்ந்து அதிகரித்தால் மேலும் விலை குறையக்கூடும் என வியாபாரிகள் தெரிவித்தனர். இத்துடன், சாம்பார் வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், பீன்ஸ், கேரட் போன்ற வகைகளும் சற்று விலை குறைந்துள்ளது.