சென்னை பெரம்பூர் எருக்கஞ்சேரியில் 600 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ கலசாத்தம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் அமைச்சர் பிகே சேகர்பாபு பங்கேற்பு.
சென்னை பெரம்பூர் எருக்கஞ்சேரி ராஜீவ் காந்தி நகரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பழமை வாய்ந்த கலசாத்தம்மன் திருக்கோயில் புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்று கோபுர விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. குடமுழுக்கு பெருவிழாவில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி கே சேகர்பாபு பங்கேற்று மகா கும்பாபிஷேகத்தை துவக்கி வைத்தார்.
முன்னதாக 3 நாட்கள் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம் மகா லட்சுமி ஹோமம் வாஸ்து சாந்தி பூஜைகள் நடைபெற்றது. இதனை அடுத்து இன்று காலை கோ பூஜை, தன பூஜை, தம்பதி பூஜை, கலச அர்ச்சனை, மூலமந்திர மகாயாகம், திரவிய ஹோமம், பூர்ணாவதி, யாகசாலை பூஜைகள் நிறைவுபெற்று பூர்ணாஹுதி முடிந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மேளதாளங்களுடன் ஊர்வலமாக சென்று விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றினர் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் கும்பாபிஷேகத்தில் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.
இதனையடுத்து அம்மனுக்கு விசேஷ வாசனை திரவியங்களால் அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பழமையான அம்மன் கோவிலில் பல ஆண்டுகள் கழித்து நடைபெறும் கும்பாபிஷேகத்தில் சுற்றுவட்டார மட்டுமல்லாமல் இப்பகுதியை சேர்ந்த மக்களும் ஏராளமானோர் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். இதனையடுத்து அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் முல்லை , உதவி ஆணையர் சிவக்குமார் , செயல் அலுவலர் நித்யகலா உள்பட மாமன்ற உறுப்பினர்கள் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.