Homeசெய்திகள்சென்னைஇராயபுரத்தில் கூலித் தொழிலாளி மீது மின்சாரம் பாய்ந்து பலி

இராயபுரத்தில் கூலித் தொழிலாளி மீது மின்சாரம் பாய்ந்து பலி

-

இராயபுரத்தில் கூலித் தொழிலாளி மீது மின்சாரம் பாய்ந்து பலிசென்னை இராயபுரத்தில் வீட்டை புதுப்பிக்கும் பொழுது மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த கூலித் தொழிலாளி நந்தகுமாரின் உறவினர்கள் கட்டிடத்தின் உரிமையாளர் மற்றும் இன்ஜினியர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என ஸ்டான்லி மருத்துவமனை நுழைவாயில் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டடுள்ளது.

இராயபுரத்தில் கூலித் தொழிலாளி மீது மின்சாரம் பாய்ந்து பலி

சென்னை சிங்கார தோட்டம் பகுதியைசேர்ந்த சுஜீத்சிங், சுரேந்தர் இவர்களுக்கு சொந்தமான வீட்டை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த இன்ஜினியர் ராஜபாண்டி என்பவர் வீட்டை புதுபிக்கும் பணியில் ஒப்பந்தம் எடுத்துள்ளார். வீட்டை புதுப்பிக்கும் பணியில் தண்டையார்பேட்டை அன்னை சத்தியா நகர் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளர்கள் 7 பேர் நேற்று பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சத்தியா நகர் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார்(28) என்பவர் சென்ட்ரிங் வேலை செய்வதற்காக கட்டிங் மெஷின் வைத்து இடிக்கும் பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்துள்ளது.  அவர் உயிருக்கு போராடியதை பார்த்த நந்தகுமார் நண்பர்கள் நந்தகுமாரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பணியில் இருந்த மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதிக்குமாறு கூறியுள்ளனர்.

சாம்சங் தொழிலாளர்கள் விவகாரம்: தமிழக அரசு தலையிட்டு சுமூகமாக தீர்க்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

இதனையடுத்து நந்தகுமாரை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று அனுமதித்த போது அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து ராயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து நந்தகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் வீட்டின் உரிமையாளர் சுஜீத்சிங், சுரேந்தர், இன்ஜினியர் ராஜபாண்டியன் ஆகிய மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவுசெய்து கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று கூறி அரசு ஸ்டான்லி மருத்துவமனை நுழைவு வாயில் முன்பு நந்தகுமாரின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு   இராயபுரம் போலீசார் விரைந்து வந்துள்ளனர். மேலும் இது குறித்து வீட்டின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்ததன் பெயரில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றுள்ளனர்.

MUST READ