Homeசெய்திகள்சென்னைஉங்கள் பொருளாதாரத்தை சரியாக கையாள கற்றுக்கொள்ளுங்கள் – ஆளுநர் அறிவுரை!

உங்கள் பொருளாதாரத்தை சரியாக கையாள கற்றுக்கொள்ளுங்கள் – ஆளுநர் அறிவுரை!

-

- Advertisement -

யு.பி.எஸ்.சி. 2024 தேர்வில் வெற்றி பெற்ற‌ மாணவர்களை நேரில் அழைத்து பாராட்டிய ஆளுநர் ஆர்.என்.ரவி; பொதுமக்களிடம் இருந்து நன்கொடைகளோ அல்லது லஞ்சம் போன்ற செயல்களில் ஈடுபட கூடாது என்றும் உங்கள் பொருளாதாரத்தை சரியாக கையாள கற்றுக்கொள்ளுங்கள் என அறிவுரை வழங்கியுள்ளாா்.உங்கள் பொருளாதாரத்தை சரியாக கையாள கற்றுக்கொள்ளுங்கள் – ஆளுநர் அறிவுரை!யு.பி.எஸ்.சி. 2024 தேர்வில்  தேர்ச்சி பெற்ற மாணவர்களை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு நேரில் அழைத்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு தெரிவித்துள்ளாா். மேலும் அவர்களுக்கு சால்வை அணிவித்து கம்பராமாயணம் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.  யு.பி.எஸ்.சி. நேர்முகத்தேர்வுக்கு முன்பாக கடந்த மார்ச் மாதம் மாணவர்களை அழைத்து ஆளுநர் பயிற்சி அளித்திருந்தார். அதில் வெற்றி பெற்ற 9 மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளாா்.

இந்த நிகழ்வில் பேசிய ஆளுநர் ஆர்.என்‌.ரவி ; யு.பி.எஸ்.சி.தேர்வில் தேர்ச்சி பெறுவது அவ்வளவு எளிதில்ல. உங்களுடைய வெற்றிக்கு உங்களது பெற்றோர்கள் முக்கிய காரணம். மனைவியை தேர்ந்தெடுக்கும் போது கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். உங்களது பயணித்தின் போது மனைவி ஒத்துழைப்பை தரவில்லை என்றால் கடுமையான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டியிருக்கும். பொது வாழ்க்கையில் செயல்பட உள்ள உங்களுக்கு உங்களின் உடல்நலனும் முக்கியம். தினந்தோறும் உடற்பயிற்சி செய்யுங்கள். உங்களுக்கு சிறந்த ஊதியத்தை மத்திய அரசு தருகிறது. சேமிக்கும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள் பொதுமக்களிடம் இருந்து நன்கொடைகளோ அல்லது லஞ்சம் போன்ற செயல்களில் ஈடுபட கூடாது.

யு.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களின் திருமணம் ஆனவர் எத்தனை பேர் என கேள்வி எழுப்பிய ஆளுநர் இது ஒரு முக்கிய தருணம். உங்கள் வாழ்க்கை துணை நிச்சயமாக உங்கள் வேலை குறித்து புரிதல் உள்ளவராக இருக்க வேண்டும். உங்கள் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும்.  தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் உங்கள் துணைவியை கவனமாக தேர்வு செய்யுங்கள்.‌ நீங்கள் உங்கள் வாழ்கையில் பல சவாலான சூழல்களை சாதிக்க நேரிடும் அதற்கு துணையாக இருக்கும் இணையோரை தேர்வு செய்யுங்கள். நீங்கள் உங்கள் துணைவியார் சரியாக தேர்வு செய்யவில்லை என்றால் கடும் நெருக்கடியை சந்திக்க நேரிடும்.‌ ஏற்கனவே திருமணம் முடிந்தவர்கள் உங்கள் மனைவியை நீங்கள் தான் சமாளிக்க வேண்டும்.

உங்கள் பொருளாதாரத்தை சரியாக கையாள கற்று கொள்ள வேண்டும். உங்களுக்கு ரூ.1 லட்சம் தொடக்கத்தில் ஊதியமாக கிடைக்கும் அதில் சேமிக்க கற்றுக்கொள்ளுங்கள் தேவையற்ற செலவை குறையுங்கள்.  தேர்ச்சி பெற்று விட்டால்  நமக்கு எல்லாமே தெரிந்து விட்டது போல் என்ற எண்ணம் இல்லாமல் வாசிக்கும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். புத்தகம் படிக்கும் பழக்கத்தை கட்டாயம் பின்பன்ற வேண்டும்  ஒரு நாளைக்கு  குறைந்தது 25 பக்கம் படிக்கும் பழக்கத்தை வளர்த்து கொள்ளவேண்டும். புத்தகம் படிப்பது உங்கள் அறிவையும் செயலையும் மேம்படுத்தும். தொடந்து புத்தகம் வாசிப்பை மேற்கொள்ளுங்கள் என தெரிவித்தார்.

ஆளுநரை தொடர்ந்து செய்தியாளர் சந்திபில் மாணவர்கள் கூறியிருப்பதாவது,

ப்ரவீன், ” 2023 முதல் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் சிவில் சர்வீஸ் தேர்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் மூலம் பயன் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளேன். அதில் பத்து மாதங்களுக்கு மாதம் 7500 ரூபாய், முதல் நிலை தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் மெயின் தேர்வு எழுதுவதற்கு முன்பாக 25 ஆயிரம் ரூபாய் என்பது தற்போது ஐம்பதாயிரம் வரை உயர்த்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.  இதன் மூலம் பெற்றோர்களை மட்டும் நம்பாமல் மாணவர்கள் தங்களது பிடித்த படிப்பை பார்த்துக் கொள்வதாக அமைந்துள்ளது இது வரவேற்கத்தக்கது. ஆளுநர் முதல் நிலை தேர்வு முடிந்த பிறகு நேர்முகத் தேர்வுக்கு முன்னதாக இரண்டு மணி நேரம் உரையாற்றினார்.

அனைத்து விதமான தலைப்புகளிலும் விளக்கம் அளித்தார். நேர்முகத்தேர்வு முடிந்த பிறகு தேர்ச்சி அடைந்த பின் எங்களை அழைத்து ஆளுநர் வாழ்த்தியதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. சிவில் சர்வீஸ் தொழில் வாழ்க்கையில் மட்டுமல்லாது தனிப்பட்ட வாழ்க்கையிலும் எவ்வாறு இருக்க வேண்டும் என ஆளுநர் அறிவுரை கூறியதாக தெரிவித்துள்ளார் அது பயனுள்ளதாக இருந்தது என தெரிவித்துள்ளாா். ”

சுரேஷ்குமார், ”ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்தேன். தமிழ்நாடு கல்விக்கு மிகச் சிறந்த மாநிலம் என்பது அனைவரும் அறிந்தது. பெற்றோர்கள் அனைவரும் தங்கள் பிள்ளைகளுக்கு கல்வியில் தான் அதிகம் செலவு செய்வார்கள். நானும் ஒரு அதிர்ஷ்டகரமான நபர் தான் தமிழ்நாட்டில் பிறந்தது. என் பெற்றோர் நிறைய செலவு செய்தார்கள் எங்களுக்கு கல்விதான் பிரதானமாக இருந்தது. கோவையில் உள்ள அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் படித்தேன்.

ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது ஆசிரியர்கள் மூலமாக சிவில் தேர்வு எழுத வேண்டிய ஆசை வந்தது. முதற்கட்டமாக பிரான்ச் போஸ்ட் மாஸ்டராக பணிபுரிந்தேன். முதல் வருடம் நான் தேர்ச்சி பெறவில்லை எனவும் இரண்டாம் வருடம் 20 மதிப்பெண்கள் காரணமாக சர்வீஸ் கிடைக்கவில்லை. தற்போது முன்னேறி ரேங்க் கிடைத்துள்ளது. இன்னும் இந்த ரேங்கை முன்னேற்றிக் கொண்டு செல்ல வேண்டும்.

சிலருக்கு வெற்றி எளிதில் கிடைத்து விடும் சிலருக்கு படிப்படியாக கிடைக்கும். அப்படி என்ற நிலையில் மீண்டும் ஒரு முயற்சி எடுக்கப் போவதாக தெரிவித்துள்ளார். என்னுடைய பயணம் தொடரும் என தெரிவித்துள்ளார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புரிதலாக இருக்கும் எடுத்த உடனே எதை படிப்பது என்ற நிலை வரும். யுபிஎஸ்சி பாடப்பட்டியலில் நாம் படிப்பது வருவதா என்றும் பார்க்க வேண்டும்.

விடாமுயற்சி தன்னம்பிக்கை துவண்டு போகாமல் செல்லுதல் இந்த தகுதி தான் மிகவும் முக்கியம். அறிவைத் தாண்டி மனிதனின் மனதை சோதனை செய்யக்கூடிய  சூழ்நிலை ஏற்படும். சமுதாய அழுத்தம், குடும்ப அழுத்தம், பொருளாதார அழுத்தம் இருக்கும். தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்திற்கு நிறைய நல திட்டங்களை செய்து வருகிறது. தனியார் தொண்டு நிறுவனங்களும் உதவி புரிந்து பல்வேறு பயிற்சிகளை அளிக்கின்றன. தமிழகத்தில் தற்போது யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் நன்றாக உள்ளது.

நான் தமிழ் வழியில் பயின்றது போல் பல மாணவர்கள் இருக்கிறார்கள். தற்போது விழிப்புணர்வு இருந்தாலும் இன்னும் நிறைய மாணவர்கள் வருவதில்லை. இது போன்ற கல்விப் பணிகளில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளார் கல்வி மற்றும் பெண்கள் முன்னேற்றம் மேற்கொள்வது தன்னுடைய முக்கிய பணியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.”

அரவிந்தன், ” தாய் மொழியை தவிர சிறந்த மொழி எதிலும் இல்லை என மகாத்மா காந்தி அடிகளை தெரிவித்துள்ளார். தமிழ் வழியில் படிப்பது ஒரு அட்வான்டேஜ். தமிழ் வழியில் படித்தவர்களே சாதித்து வருகிறார்கள். முக்கியமாக தாய் மொழியில் படித்த ஏபிஜே அப்துல் கலாம் முதல் இஸ்ரோ டைரக்டராக இருந்த சிவன் வரை படித்துள்ளார்கள் தமிழில் தயாராவது நமக்கு முன்னுரிமையான விஷயம் என்பதை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

நான் ஏழாவது முறையில் 721 வது ரேங்க் எடுத்துள்ளேன். முதன்முறையாக நான் தேர்ச்சி பெற்றுள்ளேன். ஆளுநர் முன்னதாக எங்களுக்கு பயிற்சி அளிக்கும் பொழுது பாடரீதியாக இருந்தது. தற்போது வாழ்க்கைக்கு என்ன தேவை இந்தப் பணியை எவ்வாறு சிறப்பாக செய்வது என்பது குறித்து ஆளுநர் அறிவுரை வழங்கினார். தொடர்ந்து பயில வேண்டும் எனவும் உடல் நலத்தை பாதுகாக்க வேண்டும் என ஆளுநர் பல்வேறு அறிவுரைகள் வழங்கினார். அது மிகவும் உதவியாக இருந்தது.

கடந்த ஆண்டு நான் தேர்ச்சி பெறவில்லை. அப்போது பெற்றோர்கள் மிகவும் ஊக்கமளித்தார்கள். அதிகப் பேர் இது போன்று தோல்வி அடைந்து தான் தேர்ச்சி பெறுகிறார்கள். தொடர்ந்து முயற்சி செய் என என் பெற்றோர்கள் தெரிவித்தனர். உறவினர்கள் என் பின்னால் பேசி ஊக்கத்தை குறைத்தார்கள். பெற்றோர்கள் தான் எனக்கு உறுதுணையாக இருந்ததால் என்னை தேர்ச்சி அடைய வைத்தது என தெரிவித்துள்ளாா்.”

அவிந்தன் தந்தை கூறுகையில், ”தனது பையன் தேர்ச்சி பெற்றது மிகவும் பெருமையாக இருந்ததாக தெரிவித்துள்ளார். தங்கள் உறவினர்களுக்கும் குடும்பத்திற்கும் பெருமையாக உள்ளது. நான் உதவி ஆய்வாளராக ஓய்வு பெற்றேன். நான் வேலை பார்த்த அதிகாரிகள் மிகப்பெரிய உயர் அதிகாரிகள். இவர்களிடையே என்னுடைய பணிக்காலம் முடிந்தது. இவர்களிடம் நேர்மையாக இருந்ததால் தற்போது என் மகன் தேர்ச்சி பெற்றது நேர்மைக்கு கிடைத்த பரிசு என நான் நினைக்கிறேன்.

ஏழாவது படிக்கும் பொழுது பெரிய அதிகாரியாக வரவேண்டும் என தெரிவித்தார். நான் டிஎஸ்பியின் ஓட்டுனராக இருந்தேன். நான் செய்றன் வைத்த வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன். நானும் அது போன்ற காரில் செல்ல வேண்டும் அப்பா என தெரிவித்தார். அதற்கு நிறைய படிக்க வேண்டும் என்று நான் கூறினேன். நீ மட்டும் செய்றன் வைத்த வாகனத்தில் செல்கிறாயே என கேட்டபோது நான் வெறும் ஓட்டுனர் தான் எனக் கூறினேன். நீ படி இதுபோன்று வரலாம் என தெரிவித்தேன். எவ்வளவு செலவானாலும் படி என்று நான் தெரிவித்தேன். படித்ததால் இந்த நிலை கிடைத்தது எனக்கு பெருமையாக உள்ளது என தெரிவித்துள்ளாா்.”

விசாலி, ” பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் என்பது முக்கியம் அதைத் தாண்டி அவர்களது முடிவை அவர்களே எடுக்க வேண்டும். அரசுப் பணியில் ஒரு பெண் செல்லும் பொழுது அவர் மட்டுமல்லாது அவரை சுற்றியுள்ளவர்களும் குடும்பமும் சமுதாயமே முன்னேற்றம் அடையும். பெண்கள் அரசு பணிக்கு வர வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்

என்னுடைய ஆறாவது முயற்சியில் நான் தேர்ச்சி பெற்றுள்ளேன். இது எனக்கு ஏழு ஆண்டு பயணம். எவ்வளவு தடைகள் வந்தாலும் வீட்டில் உறவினர்கள் நண்பர்கள் ஆதரவு இருந்தது. ஆனால் உறவினர்களால் ஊக்கத்தை குறைக்கும் வகையில் உண்டான பேச்சுக்கள் என் உடன் இருக்கும் நண்பர்கள் அதிகம் இதை சந்தித்துள்ளார்கள். இதனால் அவர்கள் சிவில் சர்வீஸ் பயிற்சி எடுக்க முடியாமல் போய் உள்ளது. உறவினர்கள் ஆதரவு இருந்தால் கண்டிப்பாக தேர்ச்சி பெற முடியும்.

சிவில் சர்வீஸ் சென்ற போது எல்லாவிதமான பணிகளும் வரும். அதை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதை என்னுடைய எண்ணம் எல்லாவற்றையும் மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும். எல்லாவிதமான திட்டம் என அனைத்தும் அரசிடம் இருக்கிறது. கடைக்கோடி மக்களுக்கு சேராமல் உள்ளது. எந்த வேலை செய்தாலும் சிறப்பாக செய்ய வேண்டும் என கூறியுள்ளாா். ”

என்ன நடந்தது காஷ்மீரில்? உலுக்கும் சம்பவத்தின் பகீர் பின்னணி!

MUST READ