Homeசெய்திகள்சென்னைமெரினாவில் ஒன்று கூடுவோம்- சமூகவலைத்தளங்களில் போராட்ட அறிவிப்பு- போலீசார் குவிப்பு

மெரினாவில் ஒன்று கூடுவோம்- சமூகவலைத்தளங்களில் போராட்ட அறிவிப்பு- போலீசார் குவிப்பு

-

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 54 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தவறிய மாவட்ட ஆட்சியர் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், உள்ளிட்ட மாவட்ட காவல்துறை அதிகாரிகள் பலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள பல அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். மேலும் அரசின் செயல்பாட்டை கண்டித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் முழு மதுவிலக்கு மற்றும் போதை இல்லா தமிழகத்துக்காக மெரினாவில் ஒன்று  கூடுவோம் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் அனைவரும் வாரீர்- ஜூன் 22 காலை முதல் தொடர் போராட்டத்தை துவங்குவோம் என்று சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகி.

மெரினாவில் ஒன்று கூடுவோம்- சமூகவலைத்தளங்களில் போராட்ட அறிவிப்பு- போலீசார் குவிப்புஇதை வெளியிட்டது யார்? எந்த அமைப்பு என்று தெரியவில்லை. ஆனாலும் ஒரு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த போராட்டம் போன்று மீண்டும் ஒரு போராட்டத்தை மெரினாவில் தொடங்கிவிடக் கூடாது என்பதில் அரசு கவனத்துடன் செயல்பட்டு வருகிறது.

அதனால் கலங்கரை விளக்கம் முதல் கண்ணகி சிலை மற்றும் சர்வீஸ் சாலை மணற்பரப்பு பகுதிகளில் மயிலாப்பூர் உதவி ஆணையர் தலைமையில் 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

MUST READ