Homeசெய்திகள்சென்னைவரத்து குறைவு எதிரொலி... சென்னையில் தக்காளி விலை உயர்வு!

வரத்து குறைவு எதிரொலி… சென்னையில் தக்காளி விலை உயர்வு!

-

வரத்து குறைவு காரணமாக சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை சந்தையில் தக்காளி விலை கிலோ 80 ரூபாய் வரை உயர்ந்து விற்பனையாகிறது.

சென்னையில் கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில் தக்காளி கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் பெய்த மழை காரணமாக வரத்து குறைந்ததால் சென்னையில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ.50 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், கோயம்பேடு மொத்த விற்பனை சந்தையில் இன்று வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை ரூ. 80 வரை உயர்ந்து விற்பனையாகிறது.

சென்னையில் காய்கறி விலை உயர்வு!
Photo: Koyambedu Market

கோயம்பேடு தக்காளி சந்தையில் முதல் ரகம் 25 கிலோ எடை உள்ள தக்காளி பெட்டி 2000 ரூபாய்க்கும், 15 கிலோ எடையுள்ள சிறிய பெட்டி 1000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் இரண்டாம் ரகம் தக்காளி 25 கிலோ பெட்டி 1700 ரூபாய்க்கும், 15 கிலோ பெட்டி 700 முதல் 800 வரை விற்பனை செய்யப்படுகின்றன. கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 80 ரூபாய்க்கும், சில்லறை விற்பனையில் 90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை புறநகர் பகுதியில் ஒரு கிலோ அதிகபட்சமாக 110 ரூபாய் வரை விற்பனையாகிறது.

கடுமையாக சரிந்த தக்காளி விலை... வேதனையில் விவசாயிகள்!
Video Crop

கனமழை காரணமாக கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்துள்ளதாக தெரிவித்துள்ள வியாபாரிகள், கோயம்பேடு சந்தைக்கு நாள் ஒன்றுக்கு 45 முதல் 60 வண்டிகள் தேவைப்படும் நிலையில், 32 வண்டிகள் மட்டுமே வரத்தானதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் கோயம்பேடு சந்தையில் 1300 டன் தக்காளி தேவைப்படும் நிலையில், இன்று  850 டன் தக்காளி மட்டுமே வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் தக்காளி விலையேற்றம் இன்னும் ஒரு வாரத்திற்கு நீடிக்கும் எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர்,.

MUST READ