Homeசெய்திகள்சென்னைமக்களைத் தேடி மேயர், விரைவில் தீர்வு! - மேயர் பிரியாராஜன் அறிவிப்பு

மக்களைத் தேடி மேயர், விரைவில் தீர்வு! – மேயர் பிரியாராஜன் அறிவிப்பு

-

அம்பத்தூர் பகுதியில் மக்களை தேடி மேயர் நிகழ்ச்சியில் நேரடியாக பொதுமக்களின் 424 கோரிக்கைகளை ஏற்று விரைவில் தீர்வு காணப்படும் என மாநகராட்சி மேயர் பிரியாராஜன் அறிவிப்பு.

அம்பத்தூர் பகுதியில் “மக்களை தேடி மேயர்” பொதுமக்கள் புகார் நேரடி தீர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியாராஜன், துணை மேயர் மகேஷ் குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், மற்றும் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், அம்பத்தூர் மண்டல குழு தலைவர் மூர்த்தி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

மக்களைத் தேடி மேயர் - மேயர் பிரியாராஜன் அறிவிப்பு

மேலும் இந்நிகழ்ச்சியில் பொதுபணித்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தேசிய பசுமை தீர்ப்பாயம், தமிழ்நாடு மின்சார            வாரியம், நெடுஞ்சாலைத்துறை, சுகாதாரத்துறை மற்றும் அரசு சார்ந்த துறைகளும், துறைச் சார்ந்த அதிகாரிகளும்  இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பொதுமக்களின் புகார்களுக்கு ஏற்றவாறு மேயர் அவர்கள் அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகளுக்கு புகார்களை தீர்வு காணும் படி உத்தரவிட்டார்.

மக்களைத் தேடி மேயர் - மேயர் பிரியாராஜன் அறிவிப்பு

இதில் அம்பத்தூர் சுற்று வட்டார பகுதியைச் சார்ந்த பல்வேறு  பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் புகார்களை மனுக்களாக மேயர் அவர்களிடம் கொடுத்தனர். இதில் பட்டா வழங்க கோரியும், சாலை வசதிகளை சீர்படுத்தி கொடுக்கவும், மேலும் ஏரிகளை தூர்வாரி தூய்மைப்படுத்தவும்,                        முதியோர் உதவித்தொகை வழங்கிடவும் என பல்வேறு தரப்பட்ட புகார்கள் மனுக்களாக அளிக்கப்பட்டன. அதனை ஏற்ற மேயர் அது சம்மந்தமாக விரைவாக  நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மக்களைத் தேடி மேயர் - மேயர் பிரியாராஜன் அறிவிப்பு

இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி மேயர் பிரியாராஜன் கூறுகையில், மக்களை தேடி மேயர் திட்டம் முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற்று, இன்று  அம்பத்தூர் மண்டலம்-7ல் இந்த முகாம் நடைபெறுகிறது. இதில் 424 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.   குறிப்பாக அம்பத்தூர் மண்டலம் பொறுத்தவரை மகளிர் உரிமை தொகை கேட்டு அதிகமான மனுக்கள் வந்துள்ளன. தமிழகத்தில் சிறப்பு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது,  இவை மீது விரைவாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மக்களைத் தேடி மேயர் - மேயர் பிரியாராஜன் அறிவிப்பு

தொடர்ந்து பேசிய மேயர், சென்னையில் டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது, துண்டு சீட்டு மூலம் வீடு வீடாக வழங்கப்பட்டு வருகிறது, மேலும் காலை மாலை என இருவேளையும் புகை வண்டிகள் மற்றும் பணியாளர்கள் மூலமாக கொசு மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகின்றன. மழைக்காலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே துவங்கப்பட்ட கால்வாய் கட்டும் பணிகள் சென்னை முக்கிய பகுதிகள் பொருத்தவரை 90 சதவீதங்கள் நிறைவடைந்துள்ளன. கோவளம் கொசஸ்தலையாறு கால்வாய் பணிகள் 2024 – 25 ஆம் ஆண்டுக்குள் முழுவதுமாக நிறைவடையும் என தெரிவித்தார். மேலும் ஒப்பந்ததாரர்களுக்கு விரைவாக பணிகளை செய்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது  எனவும் தெரிவித்தார்

MUST READ