சென்னையில் இன்று ஐ.பி.எல் போட்டி நடைபெற உள்ள நிலையில் நள்ளிரவு 1 மணி வரை இயங்கும் மெட்ரோ இரயில்!
16-வது ஐபிஎல் போட்டியை முன்னிட்டு சென்னையில் நடைபெறும் போட்டிகள் அன்று மட்டும் ரசிகர்களின் வசதிக்காக மெட்ரோ ரயில் நள்ளிரவு 1 மணி வரை இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதன்படி இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறும் நிலையில் இன்று நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கிரிக்கெட் ரசிகர்களின் வசதிக்காக, ஐபிஎல் போட்டி முடிந்ததும், அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து 5 முதல் 15 நிமிட இடைவெளியில் அனைத்து பகுதிகளுக்கும் ரயில்களை இயக்க சென்னை மெட்ரோ ஏற்பாடு செய்துள்ளது.
அதோடு அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து சேப்பாக்கம் வரையில் சிற்றுந்து சேவையும் வழங்க உள்ளது. கடைசி ரயிலாக அரசினர் தோட்டம் நிலையத்தில் இருந்து நள்ளிரவு 1 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.