Homeசெய்திகள்சென்னைஇனி வாட்ஸ்அப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட்!

இனி வாட்ஸ்அப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட்!

-

இனி வாட்ஸ்அப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட்!

சென்னையில் வாட்ஸ்ஆப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இனி வாட்ஸ் அப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட்.. நாளை அறிமுகம்.! - Seithipunal

சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுவருகிறது. அதை மேலும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு புது புது சலுகைகளையும், வசதிகளையும் மெட்ரோ நிர்வாகம் அறிமுகப்படுத்திவருகிறது.

அதன்படி, தற்போது வாட்ஸ்ஆப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 83000 86000 என்ற எண்ணுக்கு புறப்படும் இடம் & சேரும் இடத்தை அனுப்பி டிக்கெட்டை பெறலாம். தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் டிக்கெட்டுகளை பதிவு செய்யலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

முதற்கட்டமாக வாட்ஸ்ஆப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறும் வசதி சென்னை திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. அதன்படி 8300086000 என்ற கைப்பேசி எண்ணுக்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி டிக்கெட்களை பெறலாம். கைப்பேசி மூலம் பதிவு செய்வதால் 20% சதவீதம் தள்ளுபடி என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னையில் முதல் கட்டத்தை தொடர்ந்து தற்போது போக்குவரத்து நெரிசலை மேலும் குறைப்பதற்காக தொடர்ந்து 2-வது கட்டமாக ரூ.63,246 ஆயிரத்து கோடி மதிப்பில் 118.9 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ இரயில் பாதை மற்றும் இரயில் நிலையங்கள் அமைக்கும் பணி நடந்து வருவது குறிப்பிடதக்கது.

 

MUST READ