Homeசெய்திகள்சென்னைஅரசு மருத்துவமனைகளில் மாஸ்க் கட்டாயம்- மா.சு.

அரசு மருத்துவமனைகளில் மாஸ்க் கட்டாயம்- மா.சு.

-

அரசு மருத்துவமனைகளில் மாஸ்க் கட்டாயம்- மா.சு.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக நாளை முதல் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் சுகாதார அதிகாரிகளுடனான தமிழ்நாடு மாநில சுகாதாரப் பேரவையின் ஆலோசனைக்கூட்டத்தினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “மாநில சுகாதார பேரவையை கடந்த ஆண்டு இதே நாளில் தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார். மாநில சுகாதாரப் பேரவை இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அவசரகால அறுவைச் சிகிச்சை 2021- 22 நிதியாண்டில் 23% ஆக இருந்தது. 22-23 ஆண்டில் 77% ஆக அதிகரித்துள்ளது. இதனால் ஏராளமான உயிர்கள் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைத்து பலனடைந்துள்ளனர். மேலும் இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தை செயல்படுத்தியதால் சாலை விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கை 1.4% குறைந்துள்ளது. இந்தியா மட்டுமில்லாமல் மீண்டும் கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் உயர்ந்து வருகிறது. தற்போது வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு விமான நிலையங்களில் 2 சதவீதம் ரேண்டம் பரிசோதனை செய்தால் அதில் 10 பேருக்கு தொற்று ஏற்படுகிறது.

நாளை முதல் தமிழ்நாட்டில் உள்ள 11,300-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகள், புறநோயாளிகள், மருத்துவர்கள் என்று மருத்துவமனைக்கு வரும் அனைவரும் 100% கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், பொதுமக்கள் பதற்றம் அடைய வேண்டிய அளவிற்கு பாதிப்பு கிடையாது. நம்மை தற்காத்துக் கொள்வது அவசியம் என்பதால் முதலில் மருத்துவமனையில் இருந்து முகக்கவசம் அணிவது கட்டாயப்படுத்த வேண்டும்” என தெரிவித்தார்.

MUST READ