சம்மனை ஏற்று வழக்கின் விசாரணைக்காக சென்னையின் இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் அஜராகியுள்ளாா் அமைச்சா் பொன்முடி
திமுக ஆட்சியில் கனிவளத்துறை அமைச்சராக பொன்முடி கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை பதவி வகித்தாா் தற்போது அவர் உயர்கல்வித்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வந்தாா். அவர் கனிவளத்துறை அமைச்சராக இருந்த போது, வருமானத்திற்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் சத்துக்கள் செர்த்துள்ளாா் என்றும் குவாரியில் மண் அள்ள அனுமதிக்கப்பட்ட அளவை விட, 2.64 லட்சம் லோடு லாரி செம்மண் எடுத்ததால் அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் அவர் மீது ED வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் அமைச்சா் பொன்முடி மற்றும் அவரது மனைவியும் குற்றவாளிகள் என்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்பளித்த நிலையில் உச்ச நீதி மன்றம் தீர்பை நிறுத்திவைத்து ஜாமின் வழங்கியது. தற்போது இவ்வழக்கு தொடர்பாக அனுப்பிய சம்மனை ஏற்று வழக்கின் விசாரணைக்காக சென்னையின் இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் அஜராகியுள்ளாா். அவரிடம் விசாரணை நடத்தபட்டு வருகிறது.