Homeசெய்திகள்சென்னைஇந்தாண்டு இறுதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வரும்- சேகர்பாபு

இந்தாண்டு இறுதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வரும்- சேகர்பாபு

-

இந்தாண்டு இறுதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வரும்- சேகர்பாபு

இந்தாண்டு இறுதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வரும் என இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Image

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “இந்தாண்டு இறுதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வரும். கிளாம்பாக்கம் பேருந்துநிலையம் திறந்தபின் எவ்வித அசெளகரியம் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மழைநீர் தேங்குவது, போக்குவரத்து நெரிசல், மக்களுக்கான அடிப்படை வசதிகள் போன்ற விஷயங்கள் குறித்து சரியான திட்டமிடல் இல்லாமல் கடந்த ஆட்சி காலத்தில் கிளாம்பாக்கம் பேருந்துநிலையத்தை நிலையத்தை கட்டமைத்துள்ளனர். புதிய மழைநீர் வடிகால் அமைப்பதற்கு 17 கோடி மதிப்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை என்பதால் அதை அமைக்க ஒன்றிய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

காலை உணவு திட்டம் தேசிய அளவில் மட்டுமல்ல, உலகளாவிய திட்டம். காலை உணவு திட்டத்தை மற்ற மாநிலங்களில் விளம்பரம் செய்வதில் எந்த தவறும் இல்லை. ஒரு திட்டத்தின் மூலம் பயன் கிடைக்கும் என்றால் அனைத்து மாநிலங்களுக்கும் அதை கொண்டு செல்வதில் தவறில்லை” எனக் கூறினார்.

MUST READ