Homeசெய்திகள்சென்னைபெண்கள் மீதான பார்வையை ஆண்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்- மு.க.ஸ்டாலின்

பெண்கள் மீதான பார்வையை ஆண்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்- மு.க.ஸ்டாலின்

-

- Advertisement -

பெண்கள் மீதான பார்வையை ஆண்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்- மு.க.ஸ்டாலின்

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு காவல்துறையின் மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

MKStalin

இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக ரூ.8.5கோடி செலவில் அவள் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “காவல் பணியோடு சேர்த்து குடும்ப பணியையும் பெண் காவலர்கள் செய்துவருகின்றனர். இரவு, பகல் பாராமல் ஊருக்காக உழைக்கும் காவலர்களை பாராட்டுவதற்கான விழா இது.1973 ஆம் ஆண்டில் கலைஞர் ஆட்சியில் பெண்கள் காவல்துறையில் சேர்க்கப்பட்டனர். 50ஆம் ஆண்டு பொன்விழா தமிழ்நாட்டின் பெண் காவலர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பொன்விழா என்று சொல்லப்பட்டாலும், இது பெண்களுக்கான விழா. இது பொன் விழா அல்ல, பெண் விழா. பெண்கள் அதிகளவில் அரசியலுக்கு வரவேண்டும். அவர்கள் மேடையில் முழங்கவேண்டும் எனக் கூறியவர் அண்ணா. பெண்களுக்கு சொத்துரிமை உண்டு என்பதை சட்டமாக்கியவர் கலைஞர்.

தமிழ்நாட்டில் 35,000 பெண் காவலர்கள் பணியாற்றிவருகிறார்கள் என்றால் அதற்கான விதையை விதைத்தவர் கலைஞர். படிக்க மட்டுமல்ல, அதிகாரம் மிக்க பதவிகளுக்கு பெண்கள் வரவேண்டும் என்றவர் பெரியார். பெண்கள் காக்கிச் சீருடையில் துப்பாக்கியை ஏந்த வைத்தவர் கலைஞர். ஆண்கள், பெண்கள் மீதான பார்வையை மாற்றிக் கொள்ளவேண்டும்” என பேசினார்.

MUST READ