Homeசெய்திகள்சென்னைநாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது!

-

- Advertisement -
kadalkanni

அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட அக்கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது!அண்ணா பல்கலைக்கழகம் விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியினர் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டனர். இந்த ஆர்பாட்டத்திற்கு அனுமதி கோரி அக்கட்சியினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடிதம் அளித்துள்ளனர். இக்கடிதம் பரிசீலிக்கப்பட்டு  போராட்டம் நடைபெற்றால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் பொதுமக்களுக்கு இடையூரும், சட்ட ஒழுங்கு பிரச்சனையும் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் மேலும் ஆங்கில புத்தாண்டு பாதுகாப்பு பணிகளுக்காக காவலர்கள் நியமிக்கப்பட்டிருப்பதால் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தில் சிரமம் ஏற்படும். எனவே சட்ட ஒழுங்கு பொதுமக்கள் நலன் போன்றவற்றை கருத்தில் கொண்டு போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்து பதில் அளிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் மேற்கொண்டால் கைது செய்வதற்காக 300க்கு மட்டும் மேற்பட்ட போலீசாரும், அவ்வாறு போராட்டத்தில் ஈடுபவர்களை கைது செய்து அழைத்து செல்வதற்காக மாநகர பேருந்து மற்றும் காவல் வாகனங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இதைத் தொடர்ந்து தடையை மீறி வந்த நாம் தமிழர் கட்சியினர் அனைவரும் கைது செய்யப்பட்டு போலீஸ் வாகனங்களில் தனியார் மண்டபங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் போராட்டத்தில் ஈடுபட முயலும் பொழுது போலீசார் கைது செய்து சூளை அருகே உள்ள கண்ணப்பன் திடல் சமுதாய நலக்கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.

அதோடு பிற சமுதாய நலக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டு  இருந்தவர்களும் சீமான் தங்க வைக்கப்பட்டிருந்த சமுதாய நலக்கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

MUST READ