சாம்சங் தொழிலாளர்கள் தொடர் போராட்டம் விவகாரம் தொடர்பாக இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் ஆலை தொழிலாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 9 ம் தேதி முதல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைக்க சட்டப்படி அனுமதிக்க வேண்டும் – தமுஎகச மாநிலக்குழு கோரிக்கை
இந்த விவகாரத்தில் ஏற்கனவே சாம்சங் ஆலை நிர்வாகம், சி.ஐ.டி.யு., தொழிற்சங்க நிர்வாகிகள் இடையே ஆறு கட்ட பேச்சுவார்த்தை நடந்தும் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்த நிலையில் இன்று சென்னையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் நடத்த தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், போராட்டம் நடத்த உரிய இடம் தேர்வு செய்யப்படாமல் உள்ளதால் இன்றும் போராட்டம் நடைபெறாது என தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.