Homeசெய்திகள்சென்னைஅக்.29, 30ல் பிளாட்ஃபார்ம் டிக்கெட் விற்பனை இல்லை- தெற்கு ரயில்வே அறிவிப்பு

அக்.29, 30ல் பிளாட்ஃபார்ம் டிக்கெட் விற்பனை இல்லை- தெற்கு ரயில்வே அறிவிப்பு

-

- Advertisement -

இரு நாட்களுக்கு பிளாட்ஃபார்ம் டிக்கெட் விற்பனை இல்லை.. தெற்கு ரயில்வே அறிவிப்புஇரு நாட்களுக்கு பிளாட்ஃபார்ம் டிக்கெட் விற்பனை இல்லை என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகையை ஒட்டி மக்கள் அதிகளவில் ஊர்களுக்குச் செல்வார்கள் என்பதால் சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், பெரம்பூர் ரயில் நிலையங்களில் அக்.29, 30 ஆகிய 2 நாட்களுக்கு பிளாட்ஃபார்ம் டிக்கெட் விற்கப்படாது என தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் அறிவித்துள்ளது.

மேலும் மூத்த குடிமக்கள் மற்றும் மருத்துவத் தேவைகளைக் கொண்ட பயணிகளின்  பாதுகாப்பை உறுதி செய்ய இந்த விலக்கு அளிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.

பயணிகள்  சுமுகமான மற்றும் பாதுகாப்பான விதிமுறைகளை பின்பற்றி பயணத்தை  மேற்கொள்ளுமாறு அதற்கேற்ப திட்டமிட்டு புதிய பயணத்திற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Temporary Suspension of Plat form ticket sales in Chennai division from 29.10.2024 to 30.10.2024

Temporary Suspension of Plat form ticket sales in Chennai division from 29.10.2024 to 30.10.2024

 

MUST READ