அக்டோபர் 15 அதி கனமழையின் ஹைலைட்ஸ் !
◘ சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
◘ தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
◘ சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு அக். -16 விடுமுறை. விழுப்புரம், கடலூர் கள்ளக்குறிச்சி, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
◘ சென்னையில் மழை நீர் தேங்கிய இடங்களில் மீட்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது.
◘ ராட்சத மின் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
◘ மீட்பு பணிகள் ஆய்வின்போது தூய்மைப் பணியாளர்களுக்கு அருகில் உள்ள தேநீர் கடையில் தேநீர் வாங்கிக் கொடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உற்சாகப்படுத்தியுள்ளார்.
◘ சென்னையின் சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால், அவை மூடப்பட்டுள்ளன. பலத்த மழையால் பெரம்பூர் ரயில்வே சுரங்கப்பாதை, கெங்கு ரெட்டி, மேட்லி சுரங்கப்பாதை, வில்லிவாக்கம் சுரங்கப்பாதை, கோடம்பாக்கம் தியாகராய நகரை இணைக்கும் ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. முழங்கால் அளவு தண்ணீரில் வாகனங்கள் மிதந்து சென்றுள்ளனர்.
◘ தொடர் மழையால் வெள்ளக்காடாக மாறியது ஓஎம்ஆர் சாலை. மெட்ரோ தடுப்புகளை அகற்றி , மழை நீரை பணியாளர்கள் வெளியேற்றியுள்ளனர்.
◘ வேளச்சேரி ராம் நகர் , துரைப்பாக்கம் வேம்புலி அம்மன் கோவில் தெரு, ஆர் கே நகர், எழில் நகர், எம்ஜிஆர் நகர் , அன்னை சத்யா நகர் ஆகிய பகுதிகளின் குடியிருப்புக்குள் மழை நீர் சூழ்ந்துள்ளது. அத்யாவசிய பொருட்களுடன் மக்கள் வெளியேறியுள்ளனர். இப்பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
◘ பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். பின்னர் நாராயணபுர ஏரியையும் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.
◘ கன மழை காரணமாக சென்ட்ரலில் இருந்து புறநகர் புறப்பட வேண்டிய நான்கு ரயில்கள் ரத்து செய்யபட்டுள்ளது. பேசின்பாலம் வியாசர்பாடி இடையே தண்டவாளத்தில் மழை நீர் தேங்கி உள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.