Homeசெய்திகள்சென்னைபயணிகள் செல்போன் வைத்திருந்தாலே இனி நிம்மதிதான்... சென்ட்ரலில் டிஜிடல் லாக்கர் அறிமுகம்

பயணிகள் செல்போன் வைத்திருந்தாலே இனி நிம்மதிதான்… சென்ட்ரலில் டிஜிடல் லாக்கர் அறிமுகம்

-

- Advertisement -

சென்னை சென்ட்ரல் 2 பிளாட்பார நுழைவாயிலில் பயணிகள் தங்கள் உடைமைகளை பாதுகாப்பாக வைக்க டிஜிட்டல் லாக்கர் திறக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு செல்போனை பயன்படுத்தி லாக்கரை கையாளலாம் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பயணிகள் செல்போன் வைத்திருந்தாலே இனி நிம்மதிதான்... சென்ட்ரலில் டிஜிடல் லாக்கர் அறிமுகம்சென்னையின் முக்கிய ரெயில் நிலையமாக சென்டிரல் ரெயில் நிலையம் உள்ளது. இங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு நாள் தோறும் 158 ரெயில்கள் இயக்கப்படுகிறது. ஒரு லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த ரெயில் நிலையத்தை பயன்படுத்தி வருகிறார்கள். சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் தங்களது உடைமைகளை பாதுகாப்பாக வைப்பதற்கு தேவையான இடம் இல்லாத நிலை இருந்தது.

வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சென்னைக்கு ஏராளமானோர் சுற்றுலா பயணிகளாக வருகிறார்கள். இவர்கள் தங்களின் உடைமைகளை எங்கு சென்றாலும் தூக்கி செல்லும் நிலையே காணப்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டம் சார்பில் டிஜிட்டல் லாக்கர் அறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நடைமேடை 2-ன் நுழைவு வாயில் பகுதியில் இந்த டிஜிட்டல் லாக்கர் அறை திறக்கப்பட்டுள்ளது. இங்கு நடுத்தரம், பெரியது, மிகப்பெரியது ஆகிய 3 வகைகளில் லாக்கர் அறைகள் உள்ளது. நடுத்தர வகை லாக்கர் பெட்டிகளுக்கு 3 மணி நேரத்துக்கு ரூ.40, 6 மணி நேரத்துக்கு ரூ.60, 9 மணி நேரத்துக்கு ரூ.90-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பெரிய வகை லாக்கர் பெட்டிகளுக்கு 3 மணி நேரத்துக்கு ரூ.50, 6 மணி நேரத்துக்கு ரூ.80, 9 மணி நேரத்துக்கு ரூ.120-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

மிகப்பெரிய லாக்கர் பெட்டிகளுக்கு 3 மணி நேரத்துக்கு ரூ.60, 6 மணி நேரத்துக்கு ரூ.100, 9 மணி நேரத்துக்கு ரூ.150-ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல, ஒரு நாளைக்கு டிஜிட்டர் லாக்கர் பெட்டியை பயன்படுத்த நடுத்தர பெட்டிகளுக்கு ரூ.120, பெரிய பெட்டிகளுக்கு ரூ.160, மிகப்பெரிய பெட்டிகளுக்கு ரூ.200 கட்டணமாகும். மொத்தம் 84 லாக்கர் பெட்டிகள் இங்கு உள்ளது.

டிஜிட்டல் பயன்பாடு குறித்து  லாக்கர் பராமரிப்பாளர் பாலாஜி கூறுகையில் – டிஜிட்டர் லாக்கர் பெட்டிகள் முழுவதும் செல்போன் மூலமே இயங்கக்கூடியது. அதாவது, பயணி ஒருவர் தன்னுடைய பெட்டியை லாக்கரில் வைக்க வேண்டும் என்றால் தன்னுடைய செல்போனில் *கூகுள் லென்ஸ் ஆப்*புக்கு சென்று, டிஜிட்டல் லாக்கரில் உள்ள கியூ-ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்துகொள்ள வேண்டும். பின்னர், தங்களுக்கு தேவையான டிஜிட்டல் லாக்கரை தேர்வு செய்து கட்டணம் செலுத்தி உடைமைகளை வைத்துக்கொள்ளலாம்.

முழுவதும் செல்போன் பயனாளர்கள் மட்டுமே இந்த டிஜிட்டல் லாக்கர் சேவையை பயன்படுத்திக்கொள்ள முடியும். எவ்வளவு நேரம் நாம் லாக்கரை பயன்படுத்துகிறோம் என்பது குறித்து பயனாளர்களுக்கு உடனடி தகவல் சென்றுவிடும். இதேபோல, லாக்கரை திறக்க தங்களது செல்போனில் ‘ஓபன் லாக்கர்‘ என்ற குறியீட்டை பயன்படுத்தி திறந்துகொள்ள முடியும். இதற்கென்று ஒவ்வொரு லாக்கரிலும் பிரத்யேக கருவி பொருத்தப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம் மூலம் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை வைக்க அனுமதி கிடையாது. என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சங்கு அறுக்கும் தொழிலுக்கு சான்று; கடலூர் அகழாய்வில் புதிய கண்டுபிடிப்பு – தங்கம் தென்னரசு

MUST READ