Homeசெய்திகள்சென்னைமுருகபக்தையின் இறுதி ஊர்வலத்திற்கு வந்த மயில் - வைரலாகும் வீடியோ

முருகபக்தையின் இறுதி ஊர்வலத்திற்கு வந்த மயில் – வைரலாகும் வீடியோ

-

- Advertisement -

சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை அய்யாப்பிள்ளை தோட்டம் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய எல்லம்மாள் பூ வியாபாரம் செய்து வருகிறார்.

முருகபக்தையின் இறுதி ஊர்வலத்திற்கு வந்த மயில் - வைரலாகும் வீடியோ

முருகரின் தீவிர பக்தையான எல்லம்மாள் விரதம் இருந்து கடந்த 8 ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ஆண்டார் குப்பம் முருகன் கோவிலுக்கு அலகு குத்தி உடுக்கை பம்பை ஒலிக்க காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி உள்ளார்.

இதனையடுத்து இரண்டு நாட்கள் கழித்து அவருக்கு இதய நோய் பாதிப்பு ஏற்பட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

காசிமேடு மின் மயானத்திற்கு அடக்கம் செய்ய இறுதி ஊர்வல வாகனத்தில் வைத்து பேண்ட் வாத்தியங்களுடன் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

முருகபக்தையின் இறுதி ஊர்வலத்திற்கு வந்த மயில் - வைரலாகும் வீடியோ

அப்பொழுது தண்டையார்பேட்டை ஆர்.டி.ஒ. அலுவலகம் வழியாக இறுதி ஊர்வலம் சென்று கொண்டு இருந்த போது தனியார் குடோன் மீது மயில் ஒன்று நின்று கொண்டு எல்லம்மாள் இறுதி ஊர்வலத்தை பார்த்து கொண்டு இருந்தது.

கள்ளக்குறிச்சி விவகாரம்: விசாரணை ஆணையம் அமைப்பு.. (apcnewstamil.com)

இறுதி ஊர்வலத்தில் கலந்த கொண்டவர்கள் மயில் நிற்பதை பார்த்து முருக பக்தையான எல்லம்மாளின் இறுதி யாத்திரையில் முருகனே நின்றதாக ஆச்சரியத்துடன் கண்கலங்கி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

MUST READ