சென்னை தண்டையார்பேட்டையில் 15 ஆண்டு காலமாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்த டாஸ்மாக் அகற்றப்பட்டது. பொதுமக்கள் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.
தண்டையார்பேட்டை சேனி அம்மன் கோவில் தெரு மற்றும் வ.உசி நகர் பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை இன்று நிரந்தரமாக மூடப்பட்டது. பள்ளிகள், கோவில், மருத்துவமனை அருகாமையில் டாஸ்மாக் கடைகள் செயல்படக்கூடாது என்ற சட்ட விதிகள் இருந்த நிலையில் கடந்த 15 ஆண்டுகளாக வ உ சி நகர் பகுதிகள் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையினால் பொதுமக்கள் தினமும் வேதனைக்கு ஆளாகினர். பள்ளி செல்லும் மாணவ மாணவர்கள் இப்பகுதியில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.
மதிய வேளையில் இருந்து இரவு வரை கூட்டம் கூட்டமாக மது பிரியர்கள் சாலையில் அமர்ந்திருப்பதும் சாலை முழுவதும் கூடி நின்று மது அருந்துவது என பல்வேறு இன்னல்கள் ஏற்படுவதால் வேலைக்கு சென்று வீடு திரும்பும் பெண்கள் அச்சத்துடனே பயணிக்கும் நிலை இருந்து வந்தது. இதனை அடுத்து ஆர் கே நகர் சட்டமன்ற உறுப்பினர் எபினேசர் இடம் பொதுமக்கள் டாஸ்மாக் கடையை அகற்றுவதற்கு கோரிக்கை மனுவை அளித்திருந்தனர். அதன் அடிப்படையில் ஆர் கே நகர் சட்டமன்ற உறுப்பினர் எபினேசர் மாநகராட்சி மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் உள்ளிட்டோர் தொழில்துறை அமைச்சரிடம் முறையாக அனுமதி பெற்று டாஸ்மாக கடையை நிரந்தரமாக மூடுவதற்கு இன்று உத்தரவிட்டனர்.
இன்று முதல் அப்பகுதியில் டாஸ்மாக் கடை செயல்படாமல் அகற்றப்பட்டதால் அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கும் சட்டமன்ற உறுப்பினருக்கும் நன்றி தெரிவித்தனர்.
தூய்மை பணியாளர்களின் பிள்ளைகளுக்கு இந்த ஆட்சியில் எதிர்காலம் உள்ளது – அமைச்சர் கே.என்.நேரு