Homeசெய்திகள்சென்னைவழக்கறிஞராக பதிவு செய்தவுடன் அலப்பறை செய்த வக்கீல் - 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு

வழக்கறிஞராக பதிவு செய்தவுடன் அலப்பறை செய்த வக்கீல் – 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு

-

சென்னை பார்கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்தவுடன் குதிரை வண்டியில் ஊர்வலம், வெடி வெடித்தது, ஊர் முழுவதும் பிளக்ஸ் பேனர் என அட்ராசிட்டி செய்த வக்கீல் மீது போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை கண்ணகி நகர்,இரண்டடுக்கு பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(22), இவர் கடந்த 17ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

வழக்கறிஞராக பதிவு செய்தவுடன் அலப்பறை செய்த வக்கீல் - 3 பிரிவுகளில் வழக்குப் பதிவுஅதனை கொண்டாடும் வகையில் 100 க்கும் மேற்பட்ட நபர்களோடு பதிவு செய்த அன்று இரவு குதிரை சாரட் வண்டியில் படை சூழ, பட்டாசுகளை வெடித்துக் கொண்டும், வழிநெடுலும் பிளக்ஸ் பேனர் வைத்துக் கொண்டும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி, போக்குவரத்திற்கு முட்டுக் கட்டையாய் ஊர்வலம் வந்தனர் இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

ஊர்வலம் கண்ணகி நகர் காவல் நிலையம் அருகே வந்த உடன் பட்டாசுகளை அதிக சத்தத்துடன் வெடித்துள்ளார். இதனால் போலீசார் வெளியில் வந்து பார்த்து ஊர்வலத்தை தடுத்து நிறுத்தினர்.

வழக்கறிஞராக பதிவு செய்தவுடன் அலப்பறை செய்த வக்கீல் - 3 பிரிவுகளில் வழக்குப் பதிவுஇதனால் ஆத்திரமடைந்த ஊர்வலக்காரர்கள் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கலைந்து செல்ல மறுத்தனர்.

மேலும் வழக்கறிஞராக பணிபுரிய பதிவு செய்த அன்றே சட்டத்தை மீறிய செயல்களில் ஈடுபட்ட நபர் மீது சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் 189(5), ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வெடிபொருளை பயன்படுத்துவது 288, சட்டவிரோதமாக கூடிய கூட்டத்தை கலைக்க முயலும் பொது ஊழியரை தடுப்பது 195(1), BNS உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர் மீது ஏற்கனவே இரண்டு அடிதடி வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், எப்படி வழக்கு நிலுவையில் இருக்கும் போது பார் கவுன்சிலில் பதிவு செய்தார்கள் என கண்ணகி நகர் போலீசார் கேள்வி எழுப்புகின்றனர்.

MUST READ