மதுரவாயலில் தனியார் கல்லூரி துணைப் பேராசிரியர் ஒருவர் கழிவறையில் மூச்சுத்திணறி உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.சென்னை மதுரவாயல் வக்கீல் தோட்டம் பகுதியில் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பிரகாகர்குமார் கவார் (32) என்பவர் வசித்து வந்தார். கடந்த நான்கு மாதங்களாக சென்னை குன்றத்தூரில் உள்ள சென்னை இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி என்ற இன்ஜினியரிங் கல்லூரியில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலையில் அவரது மனைவி போன் செய்தும் நீண்ட நேரம் அவர் எடுக்காததால் தங்கி இருந்த குடியிருப்பு நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார்.
அவர்கள் கதவைத் தட்டியும் நீண்ட நேரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் கழிவறையை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது முகத்தில் கவர்சுற்றப்பட்டு பிரபாகர் குமார் இறந்து கிடந்தார். இதையடுத்து அவரது உடல் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்த வருகின்றனர்.வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தாலும் முகத்தில் கவருடன் இறந்து கிடந்து பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் கைரேகை நிபுணர்கள் வீட்டில் சோதனை செய்தனர்.அதேபோல் முகத்தில் கவரை கட்டிக்கொண்டு சுய இன்பம் செய்ததாகவும் அப்போது மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது.ஆனால் உதவி பேராசிரியர் உடல் கூறாய்வு முடிவுகள் வந்தால் மட்டுமே அவர் உயிர் இழந்தது குறித்து தெரிய வரும்.