Homeசெய்திகள்சென்னைதிருவேற்காட்டில் கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு போராட்டம்

திருவேற்காட்டில் கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு போராட்டம்

-

- Advertisement -

திருவேற்காட்டில் கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு போராட்டம்

சென்னை அருகே திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கண்களில் கருப்பு துணி கட்டி பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவேற்காட்டில் கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு போராட்டம்

சென்னை திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பெருமாள் கோயில் தெரு பகுதியில் சுமார் 300 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. குறிப்பாக கூவம் நதிக்கரையை ஒட்டி மேடான பகுதியில் அமைந்துள்ள இந்த குடியிருப்புகள் நீர் பிடிப்பு பகுதிகளில் இருப்பதாக கூறி அதனை அகற்றுவதற்கு வருவாய் துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவர்களை நேற்று கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
அதனை தொடர்ந்து அவர்களின் வீடுகளை கணக்கெடுத்து நோட்டீஸ் ஒட்டினார்கள். இதற்கு அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

கருப்பு துணி கட்டிக்கொண்டு

இதற்கிடையே இன்று குடியிருப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

MUST READ