- Advertisement -
புழல் சிறைக்கு சொந்தமான ஆம்புலன்ஸை வேளச்சேரி அரசு பணிமனையில் இருந்து சிறை காவலர் ஹரிஹரன்(48) நேற்று முன்தினம் நள்ளிரவு குடிபோதையில் புழல் சிறை நோக்கி ஓட்டி வந்துள்ளார்.
ரெட்டேரி மாதா மருத்துவமனை அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த சிறை ஆம்புலன்ஸ், எதிரே வந்த டூரிஸ்ட் கார் மீது மோதியது. இதில் இரண்டு வாகனங்களும் லேசாக சேதம் அடைந்தன.
மாதவரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் நடத்திய விசாரணையில் சிறை காவலர் ஹரிஹரன் குடிபோதையில் இருந்து தெரிய வந்ததால் போக்குவரத்து புலனாய்வு காவலர் ஹரிஹரன் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த நிலையில் இன்று சிறை காவலர் ஹரிஹரனை, சிறைத்துறை டிஜிபி அமரேஷ் பூஜாரி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.